அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பு: சத்தத்தை குறைக்குமாறு கூறிய பெண் மீது துப்பாக்கிச்சூடு

நிகழ்ச்சியின்போது அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

Update: 2023-04-03 11:04 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் சிரஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ். இவரது வீட்டில் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டதற்கு ஹரிசின் அண்டை வீட்டை சேர்ந்த ரஞ்ஜு என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது வீட்டின் மொட்டைமாடியில் நின்றவாறு ஹரிசிடம் பாடல் சத்தத்தை குறைக்கும்படியும், இரவு என்பதால் பாடல் ஒலிபரபப்பை நிறுத்துமடியும் ரஞ்ஜூ கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் தனது நண்பன் அமித் வைத்திருந்த துப்பாக்கியால் ரஞ்ஜூவை நோக்கி சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரஞ்ஜூவின் கழுத்தில் பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் ரஞ்ஜூ சரிந்து விழுந்தார்.

இதையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ரஞ்ஜூவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஸ், அவரது நண்பர் அமித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Tags:    

மேலும் செய்திகள்