பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. குழுவில் இணைந்த மனோதத்துவ நிபுணர்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், குற்றவாளி மற்றும் சந்தேகத்திற்குரியவர்கள் ஆகியோரிடம் மனோதத்துவ நிபுணர் விசாரணைக்கு தேவையான பணிகளை மேற்கொள்வார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சி.பி.ஐ. குழுவின் ஒரு பகுதியாக மனோதத்துவ நிபுணர் ஒருவரும் இணைந்துள்ளார். அவர் கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு உறுதுணையாக தேவையான உதவிகளை வழங்குவார். இந்த விசாரணையில், குற்றவாளி மற்றும் சந்தேகத்திற்குரியவர்கள் ஆகியோரிடம் அவர் ஆய்வு செய்து முடிவுகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.