வயிற்று வலி, வாந்தி: திருமணமான மறுநாளே புதுமணப்பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

திருமணமான மறுநாளே புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-20 06:17 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியை சேர்ந்த இளம்பெண் ரோஷ்னி (வயது 21). இவருக்கு முக்தார் அகமது (வயது 22) என்பவருடன் கடந்த 17-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு மறுநாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையன்று ரோஷ்னிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ரோஷ்னிக்கு ஏற்பட்டது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவே ரோஷ்னியை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை மாலை ரோஷ்னி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணமான மறுநாள் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட புது மணப்பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்