வீட்டு வேலையின்போது மயங்கி விழுந்த பெண் சாவு
பெல்தங்கடி அருகே வீட்டு வேலையின்போது மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.;
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா முண்டாஜே அருகே உள்ள சன்யாசிகட்டே பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (வயது55). இவருக்கு பஷ்பா என்ற மகள் உள்ளார். பார்வதி சோமந்தட்காவில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைக்காக சென்றார். இந்தநிலையில் பார்வதி வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு கக்கன்ஜே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பார்வதி உயிரிழந்தார். இது குறித்து பார்வதியின் மகள் புஷ்பா அளித்த புகாரின் பேரில் தர்மஸ்தலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.