ஏரியில் குதித்து பெண் தற்கொலை

கொள்ளேகாலில் ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-29 05:00 GMT

கொள்ளேகால்-

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா கெம்பாபுரா கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை. இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் தற்கொலை செய்துகொள்ளவும் முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் உள்ள ஏரியில் குதித்து கவுரம்மா தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொள்ளேகால் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கவுரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்