ஆட்டுக்கறி வாங்க பணம் கொடுப்பதில் வாக்குவாதம்: கணவனை செங்கலால் அடித்துக்கொன்ற மனைவி

ஆட்டுக்கறி வாங்க பணம் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனை செங்கலால் மனைவி அடித்துக்கொன்றார்.

Update: 2024-08-09 16:30 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் ஹதுடா கிராமத்தை சேர்ந்தவர் சத்பால் (வயது 45). இவரது மனைவி காயத்ரி தேவி. கணவன் - மனைவி இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்துள்ளது. சத்பால் தனது மனைவியை அவ்வப்போது கடுமையாக தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் ஆட்டுக்கறி வாங்க ரூ. 300 தரும்படி சத்பால் தனது மனைவி காயத்ரியிடம் கேட்டுள்ளார். ஆனால், கணவருக்கு பணம் கொடுக்க காயத்ரி மறுத்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியபோது காயத்ரியை சத்பால் கடுமையாக தாக்கியுள்ளார்.

வீட்டிற்கு வெளியே வைத்து சத்பால் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி அருகே கிடந்த செங்கலால் கணவனின் தலையில் கடுமையாக தாக்கினார். இதில், சத்பாலின் மண்டை உடைந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தால் சத்பால் உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்