பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத கூட்டணி வலுவாக இருக்காது: ராஷ்டிரீய லோக்தளம் கருத்து

பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத கூட்டணி வலுவாக இருக்காது என்று ராஷ்டிரீய லோக்தளம் கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2023-06-18 20:21 GMT

கோப்புப்படம்

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வருகிற 23-ந் தேதி பாட்னாவில் ஆலோசனை நடத்துகின்றன. இதை ராஷ்டிரீய லோக்தளம் கட்சியின் உத்தரபிரதேச தலைவர் ரமாஷிஷ் ராய் வரவேற்று உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஒரு எதிர்க்கட்சி கூட்டணியை ராஷ்டிரீய லோக்தளம் வரவேற்கிறது. எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான ஒருமித்த கருத்தை உருவாக்க நடைபெறும் இந்த கூட்டத்தின் முடிவை ஏற்போம். காங்கிரஸ் இல்லாமல், எந்த ஒரு முன்னணியும் பா.ஜனதாவுக்கு எதிராக திறம்பட செயல்பட முடியாது என்பது எங்கள் கருத்து' என கூறினார்.

சமாஜ்வாடி கட்சியுடனான உறவில் விரிசலா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், 'சமீபத்தில் நடந்த உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சமாஜ்வாடியும், ராஷ்டிரீய லோக்தளமும் இணைந்து போட்டியிட்டிருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும என அவர்கள் கருதுகின்றனர்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்