'நானும் அயோத்தி ராமர்கோவிலுக்கு செல்வேன்' - முதல்-மந்திரி சித்தராமையா
ராமரை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிவமொக்கா,
முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் ராமருக்கு எதிரிகள் இல்லை. இதை வைத்து அரசியல் செய்யும் பா.ஜனதாவை தான் எதிர்க்கிறோம். நாங்கள் ராம பக்தர்கள். ஆனால் பா.ஜனதாவினர், ராமரை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். வருகிற 22-ந் தேதி அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்படுகிறது. அதன் பிறகு நானும் அயோத்தி ராமர்கோவிலுக்கு செல்வேன். எங்கள் கட்சி தொண்டர்களும் அந்த கோவிலுக்கு செல்வாா்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.