பீகாரில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு ரத்து : பிரஷாந்த் கிஷோர் வாக்குறுதி

பீகாரில் ஆட்சிக்கு வந்தால், பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் பூரண மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.;

Update:2024-09-15 13:51 IST

பாட்னா,

அரசியல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர், தனது ' ஜன் சுராஜ்' அமைப்பை புதிய கட்சியாக தொடங்க திட்டமிட்டுள்ளார். வரும் 2-ஆம் தேதி தனது கட்சியை முறைப்படி தொடங்குகிறார். பீகாரில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோர் ஆயத்தமாகி வருகிறார்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரசாந்த் கிஷோர் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலத்தில் தற்போது உள்ள மதுவிலக்கு கட்டுப்பாடுகள் பயனற்றது. அது சட்டவிரோதமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய வழிவகுத்தது. மாநிலம் ரூ. 20,000 கோடி கலால் வருவாயை இழந்து இருக்கிறது. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன்"இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்