காரில் ஏறிய சித்தராமையா பின்னோக்கி சரிந்ததால் பரபரப்பு

விஜயாப்புரா அருகே காரில் ஏற முயன்ற சித்தராமையா பின்ேனாக்கி சரிந்து விழுந்தார். அவரை நிர்வாகிகள் தாங்கி பிடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2023-04-29 21:37 GMT

விஜயாப்புரா:-

கால் தவறிய சித்தராமையா

விஜயாப்புரா மாவட்டம் கூடலகி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று காலை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஹெலிகாப்டரில் வந்திறங்

கினார். பின்னர் ஹெலிபேடு மைதானத்தில் இருந்து கூடலகி செல்ல ஸ்கார்பியோ காரில் சித்தராமையா ஏற முயன்றார். அதாவது அவர் காரின் முன்பகுதி இருக்கையில் அமர கார் கதவை பிடித்து ஊன்றி ஏறி அங்கு நின்றவர்களை பார்த்து கை அசைக்க முயற்சி செய்தார்.

அந்த சமயத்தில் அவர் கால் தவறி பின்னோக்கி சரிந்தார். அப்போது காரின் அருகே நின்றிருந்த காங்கிரசார் அவரை தாங்கி பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதே காரில் ஏறி சித்தராமையா பிரசாரம் கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றார். இதற்கிடையே சித்தராமையா காரில் ஏறிய போது தவறி சரிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

ஆரோக்கியமாக இருக்கிறேன்

இதுதொடர்பாக சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கூடலகி பிரசாரத்திற்காக சென்ற போது காரில் ஏற முயன்ற போது கால் தவறியது. நான் தினமும் பயன்படுத்திய கார் அது அல்ல. பக்கவாட்டில் படியில்லாமல் இருந்ததால் பின்னோக்கி விழ வேண்டிய நிலை ஏற்பட்டது. யாரும் பீதி அடைய வேண்டாம். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த விஷயத்தை யாரும் பெரிதாக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பரபரப்பு

ஆனால் பிரசாரத்தின் போது சித்தராமையா காரில் ஏற முயன்ற போது சறுக்கிய சம்பவம், கர்நாடக தேர்தலில் சித்தராமையாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என பரபரப்பு விவாதப்பொருளாக மாறிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்