மேற்கு வங்காளம்: மத்திய அரசுக்கு எதிர்ப்பு; 2 நாள் தர்ணா போராட்டம் தொடங்கிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டம் தொடங்கி உள்ளார்.

Update: 2023-03-29 09:39 GMT



கொல்கத்தா,


மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு வங்காள மாநிலத்திற்கு, 100 நாட்கள் வேலைக்கான உரிய தொகையை தராமல் மத்திய அரசு நிறுத்தி விட்டது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூட எங்களுடைய மாநிலத்திற்கு என்று எதுவும் அளிக்கப்படவில்லை. அதனால், மேற்கு வங்காள மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து வருகிற 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் அம்பேத்கார் சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு எதிராகவும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் கொல்கத்தா நகரில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டம் தொடங்கி உள்ளார்.

இதேபோன்று, ஜனநாயகம், கூட்டாட்சி முறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் அம்பேத்கார் சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த 27-ந்தேதி நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசார் பங்கேற்றனர். அவரது இந்த ஆதரவை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனநாயகம் காப்பாற்றப்பட முன்வரும் எவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்