கிறிஸ்துமசுக்கு மறுநாள் அரசு விடுமுறை - மேற்கு வங்காள அரசு அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2022-12-01 02:36 GMT

கொல்கத்தா,

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் அதை நினைவு கூருகிறார்கள். கிறிஸ்துமஸ் அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பிற அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வருகிற டிசம்பர் 26-ந்தேதி கிறிஸ்துமசுக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்