கார் விபத்து நடந்தது எப்படி? மம்தா பானர்ஜி பேட்டி

ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2024-01-24 16:13 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பர்தமானில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அங்கு மக்களை சந்தித்து பேசிய பிறகு கொல்கத்தாவுக்கு சாலை வழியாகத் திரும்பும் போது, அவரது கார் விபத்தில் சிக்கியது.

இதில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டரில் திரும்பவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

மம்தா பானர்ஜியின் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விபத்து குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

எனக்கு காய்ச்சல் வர மாறி உள்ளது. குளிராகவும் இருக்கிறது. எனது காருக்கு முன்பாக வேகமாக ஒரு வாகனம் வந்தது. அது மிகவும் வேகமாக வந்தது. ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தேன். நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதன் வேலைகளை செய்கிறது. நான் மருத்துவமனைக்கு செல்லமாட்டேன். குளிராக இருப்பதால் வீட்டிற்கு செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்