2000 ரூபாய் நோட்டு வடிவில் திருமண அழைப்பிதழ் - ஆச்சரியத்தில் உறவினர்கள்...!

திருமண அழைப்பிதழை உறவினர்கள் வழங்கிய போது 2000 ரூபாய் நோட்டை வாங்கியது போன்ற உணர்வு உள்ளதாக தெரிவித்தனர்.;

Update:2023-01-27 10:58 IST
2000 ரூபாய் நோட்டு வடிவில் திருமண அழைப்பிதழ் - ஆச்சரியத்தில் உறவினர்கள்...!

திருப்பதி,

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். வியாபாரி. இவரது இளைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்க முடிவு செய்தார்.

அதன்படி 2000 ரூபாய் நோட்டை போன்று அதே அளவில் மணமகள்- மணமகன் ஆகியோர் பெயர்களை முன்புறத்தில் அச்சடித்தார். பின்புறத்தில் திருமண விவரங்கள் இருந்தன. திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய போது 2000 ரூபாய் நோட்டை வாங்கியது போன்ற உணர்வு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெங்கடேஷ் ஏற்கனவே தனது மூத்த மகள் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண அழைப்பிதழை வித்தியாசமாக வழங்கிய வெங்கடேஷை பலரும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்