10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் இந்தியா

10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது.;

Update:2025-03-25 05:41 IST
10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் இந்தியா

டெல்லி,

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியா அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், முதல் முறையாக 10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது. தான்சானியா, மோசாம்பிகியூ உள்பட 10 நாடுகளுடன் அடுத்த மாதம் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்