மத்திய அரசின் கடன் அதிகரிப்பது பற்றி வாய்திறப்பதில்லை - மம்தா பானர்ஜி காட்டம்
மத்திய அரசின் கடன் அதிகரிப்பது பற்றி அவர்கள் ஒருபோதும் வாய்திறப்பதில்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மாநிலக் கடன் அதிகரித்து வருகிறது என்று தான் மத்திய அரசு சொல்கிறது. மத்திய அரசின் கடன் அதிகரிப்பது பற்றி அவர்கள் ஒருபோதும் வாய்திறப்பதில்லை, மாநிலத்தில் பல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி, கடன் சுமையைக் குறைத்திருக்கிறோம் ஆனால், அவர்கள் இதுகுறித்து பதில் அளிப்பதில்லை. ஆகஸ்ட் 10ஆம் தேதி (மணிப்பூர் பற்றி) பேசுவார் என்று செய்தித்தாளில் படித்தேன்.
இது ஜோதிடத்திற்கு பொருந்துமா? இது ஒரு அவசரப் பிரச்சினை. ஒவ்வொரு வழக்கிலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ- ஐ கொண்டு வருகிறார்கள். நாங்கள் அனைத்து பண்டிகைகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கிறோம். ஷப் இ-பாரத் மற்றும் கரம் பூஜைக்கு மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது என்றார்.