சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த, தனித்துவமிக்க நாடு என நாம் உலகிற்கு காட்ட முடியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

வளைகுடா நாடுகளில் உள்ள ஒவ்வொருவரும், பிரதமர் மோடியையே நாங்கள் விரும்புகிறோம் என கூறுவார்கள் என நான் சவால் விட தயாராக இருக்கிறேன் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

Update: 2023-02-21 13:16 GMT



புதுடெல்லி,


டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், தொடர்ந்து பொருளாதார நெருக்கடியான சூழல் போன்றவை பற்றி குறிப்பிட்டு பேசினார்.

அதுபற்றி மத்திய மந்திரி கூறும்போது, பாகிஸ்தானின் வருங்காலம் பெருமளவில் அதன் சொந்த நடவடிக்கைகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் விசயங்களால் தீர்மானிக்கப்படுகிறது. யாரும் முன்விளைவு இன்றி, திடீரென ஒரு கடின சூழ்நிலையை அடைவதில்லை.

அவர்களே அதற்கான தீர்வை காண வேண்டும். அந்த நடைமுறையில் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும் வகையில் நமது உறவு இன்று இல்லை என கூறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்தியாவை விட தற்போது உள்ள இந்தியா நம்ப தகுந்தது என்று வளைகுடா நாடுகள் பார்க்கின்றன. அந்நாட்டு மக்களை நீங்கள் கேட்டு பாருங்கள். உங்களது விருப்பம் பிரதமர் மோடியா? அல்லது முந்தின ஆட்சியாளர்களா? என்று கேளுங்கள்.

வளைகுடா நாடுகளில் உள்ள ஒவ்வொருவரும், பிரதமர் மோடியையே நாங்கள் விரும்புகிறோம் என கூறுவார்கள் என்று நான் சவால் விட தயாராக இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

இந்தியா முன்னே சென்று கொண்டிருக்கிறது. நன்றாக செல்கிறது... நமக்கு ஏன் பல நட்பு நாடுகள் வேண்டும்? ஏனெனில் நம்முடன் மக்கள் நிறைய பேர் உள்ளனர். எப்படி வெவ்வேறு நட்புறவை நாம் நிர்வகிக்கிறோம்? ஏனெனில் அதில் நாம் நல்ல முறையில் செயல்படுகிறோம் என குவாட் மற்றும் பிற அமைப்புகளுடனான கூட்டணி பற்றி அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால வெளியுறவு கொள்கை பற்றி குறிப்பிட்ட மத்திய மந்திரி, இந்தியாவின் சர்வதேச நிலைப்பாடு இன்றைய தினம் தெளிவான அளவில், மிக உயர்ந்தும் மற்றும் முழு அளவில் வலிமையாகவும் உள்ளது.  சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த, தனித்துவமிக்க நாடு என நாம் உலகிற்கு காட்ட முடியும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேட்டியின்போது கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்