பிரதமர் மோடிக்கு விராட் கோலி பிறந்த நாள் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
புதுடெல்லி ,
பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், பிரபலங்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வலிமை, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.