உத்தரபிரதேசத்தில் மதுக்கடையை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் - போலீஸ் விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் மதுக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் சண்டோலி பகுதியில், மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அங்குள்ள மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது திடீரென மதுக்கடைக்குள் புகுந்த கிராம மக்கள், அங்குள்ள மதுபாட்டில்களை சாலையில் வீசி எரிந்தனர். கடையை அடித்து நொறுக்கியதோடு, அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே சமயம் மக்கள் மதுக்கடையை தாக்கியபோது, அங்கிருந்த பணம் காணாமல் போனதாக புகார் கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.