விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட உத்தரவு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.;

Update:2024-07-08 20:56 IST

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வை சேர்ந்த நா. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வருகிற 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட மதுபான கடைகள் இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் மூடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான 13-ம் தேதியும் மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்