பார்க்கிங் பிரச்சினை: இரு குடும்பத்தினர் இடையே மோதல் - வைரல் வீடியோ

பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2024-08-28 00:15 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நோய்டாவில் செக்டர் 72 என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள இப்பகுதியில் கார் பார்க்கிங் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்தது.

இந்நிலையில், கார் பார்க்கிங் தொடர்பாக அந்த இரு குடும்பத்தினருக்கு இடையே நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பினர் கிரிக்கெட் பேட், ஆக்கி ஸ்டிக் உள்ளிட்டவற்றை கொண்டு மற்றொரு தரப்பினரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் இரு தரப்பினரும் சண்டையிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட இரு குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கார் பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையேயான மோதல் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்