துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழ்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழை நேற்று தேர்தல் கமிஷன் வழங்கியது.;

Update: 2022-08-08 03:26 GMT

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நேற்று தேர்தல் கமிஷன் அளித்தது. அதில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

அந்த சான்றிதழின் கையெழுத்திட்ட நகலை மத்திய உள்துறை செயலாளரிடம் மூத்த துணை தேர்தல் கமிஷனர் தர்மேந்திர சர்மா, தேர்தல் கமிஷன் மூத்த முதன்மை செயலாளர் நரேந்திரா என்.புடோலியா ஆகியோர் ஒப்படைத்தனர்.

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக வருகிற 11-ந் தேதி ஜெகதீப் தன்கர் பதவி ஏற்கிறார். அப்போது, அந்த நகல் வாசிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்