பெங்களூரு-ஐதராபாத் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை; பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு-ஐதராபாத் இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-09-21 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் சென்னை-மைசூரு, பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் 3-வது ரெயிலாக பெங்களூரு-ஐதராபாத் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை வருகிற 24-ந் தேதி தொடங்கப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி மூலம் இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பெங்களூரு யஷ்வந்தபுரம்-ஐதராபாத் கச்சிகுடா இடையே இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ரெயில் 610 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களை விட 2 மணி நேரம் முன்னதாக ஐதராபாத்திற்கு சென்றடைகிறது. 24-ந் தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டாலும், பயணிகளுக்கான சேவை 25-ந் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் இருமார்க்கமாகவும் தர்மாவரம், தோனே, கர்னூல், கத்வால் சந்திப்பு, மெகபூப்நகர், சாத்நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் தினமும் மதியம் 2.45 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு ஐதராபாத்தை சென்றடையும்.

Tags:    

மேலும் செய்திகள்