'வந்தே பாரத்' ரெயிலில் கதவுகள் திறக்காமல் கோளாறு - பயணிகள் பரிதவிப்பு

‘வந்தே பாரத்’ ரெயிலில் கதவுகள் திறக்காமல் கோளாறு ஏற்பட்டது.

Update: 2023-02-14 22:41 GMT

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து சோலாப்பூர் மற்றும் ஷீரடி இடையே புதிதாக 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷீரடியில் இருந்து மும்பை நோக்கி வந்தே பாரத் ரெயில் வந்தது. தானே ரெயில் நிலையத்தில் நின்றபோது, பயணிகள் கீழே இறங்க தயாரானார்கள். இருப்பினும் சுமார் 10 நிமிடங்களாக கதவு திறக்கவில்லை. இதனால் பரிதவித்த பயணிகள் ரெயில் கார்டு கேபின் வழியாக இறக்கி விடப்பட்டனர். தாதர் வந்தவுடன் கதவுகள் திறப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் சேவை தொடங்கிய சில நாட்களிலேயே வந்தே பாரத் ரெயில் 13 நிமிடங்கள் தாமதமாக சி.எஸ்.எம்.டி. நிலையம் வந்தடைந்தது. வந்தே பாரத் ரெயிலில் பல வசதிகள் இருப்பினும், கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர். அதே நேரத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்