உத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி
உத்தரகாண்டில் சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப் போகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் தனக்பூர் நகரில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
உத்தரகாண்டில் சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப் போகிறது. முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி முன்னிலையில், 2024-ம் ஆண்டு இறுதிக்குள் உத்தரகாண்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்தில் அமையும் என்று அறிவிக்க விரும்புகிறேன். அந்த சாலைகள் அமெரிக்காவில் உள்ளதை போல இருக்கும். உத்தரகாண்டில் 2014-ல் 2,517 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. அது தற்போது 3,608 கி.மீ ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.