மந்திரிகளுடன் 'கேரளா ஸ்டோரி' படம் பார்த்த உத்தரகாண்ட் முதல்-மந்திரி

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, நேற்று முன்தினம் டேராடூனில் ஒரு திரையரங்கில் தனது மனைவி, சக மந்திரிகளுடன் ‘கேரளா ஸ்டோரி’ படத்தை பார்த்தார்.

Update: 2023-05-11 00:44 GMT

டேராடூன்,

கடந்த 5-ந் தேதி வெளியான 'கேரளா ஸ்டோரி' திரைப்படம், எதிர்ப்பு, ஆதரவுடன் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, நேற்று முன்தினம் டேராடூனில் ஒரு திரையரங்கில் தனது மனைவி, சக மந்திரிகளுடன் 'கேரளா ஸ்டோரி' படத்தை பார்த்தார்.

பின்னர் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இல்லாமலே பயங்கரவாதம் எப்படி பரப்பப்படுகிறது என்பதை 'கேரளா ஸ்டோரி' படம் காட்டுகிறது. பெண்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பதை காட்சிப்படுத்தியுள்ளது. மதமாற்றம் மற்றும் பயங்கரவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும்கூட மதமாற்றம் நடைபெற்றுவருகிறது. எதிர்காலத்தில் இது பெரும்பிரச்சினையாக உருவெடுக்கும். அதை கருத்தில்கொண்டுதான், மாநிலத்தில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களை ஆசைகாட்டியோ, வலுக்கட்டாயமாகவோ மதமாற்றம் செய்வோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வரை விதிக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.'

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்