உத்தரகாண்ட் பேருந்து விபத்து - ராகுல் காந்தி இரங்கல்

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-06 01:54 GMT

டேராடூன்,

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்டின் யமுனோத்ரி நோக்கி புனித யாத்ரீகர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்து யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் பலர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து விபத்தில் சிக்கியதற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

உத்தரகாண்டில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது சென்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்