உ.பி.யில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு.. கருப்பு கொடி காட்டிய நபர்கள்- வீடியோ
யாத்திரையின் 38-வது நாளான இன்று அமேதி மாவட்டத்தின் பர்சந்த்கஞ்ச் பகுதியில் இருந்து ராகுல் தனது பயணத்தை தொடங்கினார்.
ரேபரேலி:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று அவர் உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.
ரேபரேலியில் திறந்த வாகனத்தில் சென்றபோது, கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்ற இருவர் கருப்புக்கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
யாத்திரையின் 38-வது நாளான இன்று அமேதி மாவட்டத்தின் பர்சந்த்கஞ்ச் பகுதியில் இருந்து ராகுல் காந்தி தனது பயணத்தை தொடங்கினார். மாலையில் ரேபரேலி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் லக்னோவுக்கு புறப்பட்டு செல்கிறார்.