2023ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: முதலிடம் பிடித்த ஐ.ஐ.டி மாணவர்

கடந்த ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.;

Update:2024-04-16 16:37 IST

புதுடெல்லி,

மத்திய அரசுப் பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்காணல் நடைபெற்றது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை இன்று (ஏப். 16) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1,016 பேர் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் கான்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். மேலும் அனிமேஷ் பிரதான் மற்றும் டோனூரு அனன்யா ரெட்டி ஆகிய இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மக்களவை தேர்தலையொட்டி நடப்பாண்டிற்கான யு.பி.எஸ்.சி. பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மே 26ம் தேதியிலிருந்து ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்