உத்தரகாண்டில் 17 வயது சிறுமியை கடத்தி 5 நாட்கள் பலாத்காரம் செய்த 3 பேர் கைது..!

உத்தரகாண்டில் 17 வயது சிறுமியை கடத்தி 5 நாட்கள் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-13 02:01 GMT

பரேலி,

உத்தரபிரதேசத்தில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி, 17 வயது சிறுமி ஒருவர் அருகில் உள்ள தையல்காரரிடம் துணிகளை தைக்க எடுத்துச் சென்றபோது, மர்ம கும்பலால் கடத்திச் செல்லப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மிர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சவுத்ரி, சிறுமியைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார்.

தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காஷிபூரில் சிறுமி இருந்ததை கண்டுபிடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். ஆனால் சிறுமி மயக்க நிலையில் இருந்தாகவும், போதைப் பொருள் கொடுத்து சிறுமி 5 நாட்கள் கடத்தப்பட்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூன்று பேரும் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போதைப்பொருள் கொடுத்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்