பிரதமர் மோடி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஓவியக் கண்காட்சி - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஓவியக் கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.;

Update:2022-11-11 18:46 IST

லக்னோ,

உத்தர பிரேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்‌ஷ் மாநாட்டு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட எட்டு நாள் ஓவியக் கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் ஆளுமையால் ஈர்க்கப்பட்ட துபாயில் வசிக்கும் அக்பர் கான் என்பவர் வரைந்த 55 ஓவியங்கள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி நவம்பர் 11 முதல் 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.

குஜராத்தில் டீ வியாபாரியாக இருந்தது முதல் உலகத் தலைவரானது வரையிலான பிரதமரின் பயணத்தை விவரிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. இந்தியாவை 'விஸ்வ குருவாக' மாற்றும் பிரதமர் மோடியின் உறுதியை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்த கண்காட்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி திறப்பு விழாவில் மத்திய ஆயுஷ், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் மந்திரி சர்பானந்தா சோனோவால் மற்றும் மாநில மந்திரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்