குடியரசுதின கொண்டாட்டம்: தடையில்லா மின்சாரம் வழங்க யோகி ஆதியநாத் உத்தரவு..!!

குடியரசுதினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, தடையில்லா மின்சாரம் வழங்க உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதியநாத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-01-25 17:52 GMT

கோப்புப்படம்

லக்னோ,

குடியரசு தினத்தன்று மாநிலம் முழுதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்திர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

முதல்-மந்திரியின் இந்த உத்தரவுக்கு இணங்க, அனைத்து பெருநகரங்களிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பணியில் மின்சார துறை ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எம்.தேவ்ராஜ் கூறுகையில், "குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்படும். மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க உத்தரபிரதேச அரசு உறுதிபூண்டுள்ளது.

அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க மின் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மட்டத்தில் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முழு விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உள்ளூர் பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்து, அதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாநில அட்டவணையின்படி, தற்போது பெருநகரங்கள், மாவட்டத் தலைமையகம், தாஜ் ட்ரேபீசியம் பகுதியில் 24 மணிநேரமும், கிராமப்புறங்களில் சுமார் 18 மணிநேரமும், தாலுகாக்கள், தலைமைச் செயலகம் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் 21.5 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப, மாநிலத்தில் போதுமான மின்சாரம் உள்ளது" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்