'நாட்டில் பயனற்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது..' - ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கருத்து

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Update: 2023-07-07 15:36 GMT

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் செய்திதியாளர்களிடம் பேசுகையில், "அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது. இதை முன்னரே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் நாட்டில் பயனற்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற அரசியல் நிறுத்தப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்