வருகிற 18-ந் தேதி ஒற்றுமை ஊர்வலம்

சிக்கமகளூரு திருவிழாவை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி ஒன்றுமை ஊர்வலம் நடத்தப்படும் என்று நகரசபை தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-07 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு நகரசபை தலைவர் வேணுகோபால் தலைமையில் சிக்கமகளூரு திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகரசபை கமிஷனர் பசவராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது நகரசபை தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

சிக்கமகளூருவில் வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை சிக்கமகளூரு திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின் தொடக்கமாக வருகிற 18-ந் தேதி ஒற்றுமை ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலம் சிக்கமகளூரு பசவனஹள்ளியில் தொடங்கி அனுமந்தப்பா சர்க்கிள், எம்.ஜி.ரோடு மற்றும் கலெக்டர் அலுவலகம் வழியாக சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தை சென்றடைகிறது. இதில் அனைத்து தரப்பு மக்களும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்ள வேண்டும். திருவிழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஊர்வலத்தில் சிக்கமகளூருவின் வேளாண் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெறும். இதற்கான ஏற்பாடுகளை நகரசபை அதிகாரிகள் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்