பெங்களூருவில் யார் ஆட்சியில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டன? அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு
பெங்களூருவில் யார் ஆட்சியில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டன? என்று அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு: வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-பெங்களூருவில் ஏரிகளை ஆக்கிரமித்தவா்கள் யார், யாருடைய ஆட்சியில் எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்பது குறித்து அறிக்கை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் கேட்போம்.
அவர் அனுமதி வழங்கும் நாளில் ஆவணங்களுடன் ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்.சில அதிகாரம் படைத்தவர்கள், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதனால் தான் பெங்களூருவில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.