மதுபழக்கத்தை கைவிட முடியாததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தார்வார் அருகே மதுபழக்கத்தை கைவிட முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-07 15:29 GMT

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுன் கெபசூர் பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (வயது 44). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மதுபழக்கத்தை கைவிடுமாறு அவரது மனைவி கூறியுள்ளார். மோகனும் மதுபழக்கத்தை கைவிட முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த மோகன் நேற்று முன்தினம்தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நவலகுந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மதுபழக்கத்தை கைவிட முடியாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்