கேரளா திரிக்ககரா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி

காங்கிரஸ் சார்பாக பிடி தாமஸின் மனைவி உமா தாமஸ் இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டார்.

Update: 2022-06-03 08:23 GMT

திருவனந்தபுரம்

கேரளாவில் சிபிஎம் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள திரிக்ககரா தொகுதி எம்எல்ஏ பிடி தாமஸ் மரணம் காரணமாக அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் சார்பாக பிடி தாமஸின் மனைவி உமா தாமஸ் இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து இடதுசாரிகள் கூட்டணி சார்பாக சிபிஎம் வேட்பாளர் ஜோ ஜோசப் நிறுத்தப்பட்டார். இதில் உமா தாமஸ் 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த திரிக்ககரா தொகுதி தொடங்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் தொகுதி ஆகும். 2011ல் இங்கு தொகுதி மறுவரையறைக்கு பின் முதல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பென்னி இங்கு வெற்றி பெற்றார்.

அதன்பின் 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் இங்கு காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பாக இங்கு பிடி தாமஸ் தொடர்ந்து வெற்றிபெற்றார். இதையடுத்து 2021ல் மீண்டும் வென்றவர். ஆனால் அதே வருடம் டிசம்பர் மாதம் மரணம் அடைந்தனர். இதையடுத்து வந்த இடைத்தேர்தலில் தற்போது திரிக்ககரா தொகுதியில் அவரின் மனைவி உமா தாமஸ் வென்றுள்ளார். காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது கோட்டையை பிடித்துள்ளது.ஆளும் சிபிஎம் கட்சிக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்