ஆற்றல் தேவையில் சுயசார்பு அவசியம் என உக்ரைன் போர் கற்று கொடுத்து உள்ளது: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

பெரிய, வளர்ச்சி கண்ட நாடானாலும் ஆற்றல் தேவையில் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன் போர் கற்று கொடுத்து உள்ளது என மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-03-29 12:10 GMT

புதுடெல்லி,

புதுடெல்லியில், மத்திய நிலக்கரி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட 7-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார்.

அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, உலகில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலக அளவில் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவும் உள்ளது.

வரும் காலத்தில், நகரமயம் மற்றும் தொழில்மயம் என ஆக கூடிய சூழலில், மக்களுக்கு அதிகளவிலான வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்பட பல விசயங்கள் தேவையாக இருக்கும்.

அரசின் தொலைநோக்கு கொள்கைகளால், வெளிநாட்டு நிறுவனங்களின் விருப்பத்திற்குரிய முதலீட்டு மையம் ஆக நாம் உருவெடுத்து உள்ளதுடன், வெளிநாட்டு நிறுவனங்களையும் ஈர்த்திருக்கிறோம் என பேசியுள்ளார்.

உக்ரைன் போரால் உலகம் சந்தித்து வரும் ஆற்றல் நெருக்கடி பற்றி சுட்டி காட்டிய அவர், தேசத்தின் ஆற்றல் பாதுகாப்பு பற்றிய, தொலைதூரத்தில் உள்ள அடைய கூடிய முயற்சிகளை நோக்கி செல்வது தேவையாக உள்ளது என கூறியுள்ளார்.

ஒரு நாடு எவ்வளவு பெரிய மற்றும் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கிற என்பது முக்கியமில்லை. ஆற்றல் தேவைகளுக்கு அது சுயசார்புடன் இல்லை என்றால், அதன் வளர்ச்சிக்கு தடை ஏற்படும்.

அதனால், ஆற்றல் தேவைக்கு சுயசார்புடன் இருப்பது முக்கியம் என்று உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான மோதலானது, உலக நாடுகளின் கவனம் ஈர்த்து உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்