மகளை மாற்றுமதத்தவருக்கு திருமணம் செய்துவைக்க கட்சியினர் எதிர்ப்பு: திருமணத்தை நிறுத்திய பாஜக தலைவர்

பாஜக தலைவரான அவர் நகராட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

Update: 2023-05-21 03:49 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி ஹர்வால் மாவட்டம் பவ்ரி நகராட்சி தலைவராக யஷ்பால் பினம் செயல்பட்டு வருகிறார். இவர் அப்பகுதி பாஜக தலைவராகவும் உள்ளார்.

இதனிடையே, யஷ்பாலின் மகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்துவைக்க யஷ்பால் முடிவு செய்துள்ளார். வரும் 28ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்கள், கட்சியினருக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால், பாஜக தலைவரின் மகள் மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜந்தா சவுக் பகுதியில் பாஜகவினர், விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்க்தல், பைய்ரவ் சேனா உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், சமூகவலைதளங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் வைரலானது.

இதனை தொடர்ந்து பாஜக தலைவர் வரும் 28-ம் தேதி நடைபெறவிருந்த தனது மகளின் திருமணத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக யாஷ்பால் கூறுகையில், எனது மகளின் மகிழ்ச்சிக்காக அவரை இஸ்லாமிய மத இளைஞருக்கு திருமணம் செய்துவைக்க நினைத்தேன். ஆனால், தற்போது நான் மக்களின் குரலையும் கேட்க வேண்டும். அதனால் திருமணத்தை நிறுத்தி வைத்துள்ளேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்