ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் சாகசம்: இருவர் கைது

டெல்லி துவாரகா பகுதியில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட ஸ்பைடர்மேன் உடை அணிந்து பைக்கில் சாகசம் காட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2024-04-26 19:36 IST

புதுடெல்லி,

ரீல்ஸ் மோகத்தில் காரின் மேல் ஏறி நடனம், ஓடும் ரெயிலில் நடனம், விலையுயர்ந்த பொருட்களை உடைப்பது, அந்தரத்தில் நின்று சாகசம் எனப் பல பகீர் சம்பவங்களை தினந்தோறு நடத்துகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் டெல்லி துவாரகா பகுதியில் நடந்துள்ளது.

தென்மேற்கு டெல்லியின் துவாரகா மெட்ரோ ஸ்டேஷனில் சூப்பர் ஹீரோ உடை அணிந்து வரும் பெண் ஒருவர் ஸ்பைடர் மேன் உடையணிந்து வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருப்பவருடன் செல்கிறார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் கைகளை உயர்த்தியபடி செல்கின்றனர்.

இதுதொடர்பான வீடியோவை அவர்கள் இன்ஸ்டாவிலும் பதிவிட்டனர்.

இந்த வீடியோ 9.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 77,000 க்கும் மேற்பட்ட 'லைக்குகளையும்' பெற்று இணையத்தில் வைரலானது. தலைக்கவசம், ஓட்டுநர் ஒரிமம், பக்கவாட்டு கண்ணாடிகள், நம்பர் பிளேட் என எதுவும் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதாக அவர்கள் மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசார் "ஸ்பைடர்மேன்" ஆதித்யா (20), மற்றும் அவரது தோழி "ஸ்பைடர்-வுமன்" அஞ்சலி (19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்