பிளாக் மேஜிக்கால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது... காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி

கருப்பு ஆடை அணிவதன் மூலம் தங்களது அவநம்பிக்கையை போக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

Update: 2022-08-10 16:04 GMT

Image Courtesy:ANI 

புதுடெல்லி,

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கடந்த 5-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதனை கிண்டலடிக்கும் வகையில், பிரதமர் மோடி அரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இலவசங்கள் வழங்கும் அரசியலில் ஈடுபடும் சில எதிர்க்கட்சிகள், புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் செயல்படுகின்றன. ஆகஸ்ட் 5-ம் தேதி சிலர் 'பிளாக் மேஜிக்' செய்ய முயன்றதைப் பார்த்தோம்.

கருப்பு ஆடை அணிவதன் மூலம் தங்களது அவநம்பிக்கையை போக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் மாந்திரீகம், சூனியம், மூடநம்பிக்கை போன்றவற்றில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்