உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!
இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காசிப்பூர்,
உத்தரபிரதேசம் மாநிலம், காசிப்பூர் மாவட்டத்தில் சக்சேம்ரா கிராமத்தின் அருகே வாரணாசி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீெரன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் தாய்- மகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.