அட்டரி-வாகா எல்லையில் பாரம்பரிய முறைப்படி இறக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் கொடிகள்

அட்டரி-வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தானின் கொடிகளை பாரம்பரிய முறைப்படி இறக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2023-01-26 12:20 GMT

சண்டிகர்,

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டரி பகுதி அமைந்துள்ளது. அதே போல் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டரி-வாகா எல்லையில் இருநாட்டு 'பின்வாங்கு முரசறை' (Beating the Retreat) என்று அழைக்கப்படும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்த கொடியிறக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இந்தியாவின் பக்கத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தானின் பக்கத்தில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த ரேஞ்சர்ஸ்களும் பங்கேற்பார்கள்.

இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு, கொடியிறக்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமான மக்கள் அட்டரி-வாகா எல்லையில் குவிந்தனர். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி கொடி இறக்கப்பட்டு, அங்கிருக்கும் இரும்பு கதவு மூடப்பட்டது. இந்த நிகழ்வுகளை அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்