யமுனை நதியில் காணப்படும் நச்சு நுரை - சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கவலை

தொழிற்சாலை மற்றும் நகர்ப்புற கழிவுகள் திறந்து விடப்படுவாதால், யமுனை நதியில் நச்சு நுரைகள் நிறைந்து காணப்படுகிறது.

Update: 2022-10-29 23:20 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக போற்றப்படும் யமுனை நதி, இமயமலையில் உற்பத்தியாகி புதுடெல்லி, ஆக்ரா வழியாக பாய்கிறது. பண்டிகை காலங்களில் யமுனை நதியில் புனித நீராடுவதை பக்தர்களிடையே தொடர்ந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது.

இத்தகைய யமுனை நதியில் தற்போது தொழிற்சாலை மற்றும் நகர்ப்புற கழிவுகள் அதிக அளவில் திறந்து விடப்படுவாதால், அதில் நச்சு நுரைகள் நிறைந்து காணப்படுகிறது. முழுமையாக சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர், நதியில் கலப்பதன் காரணமாக அதிக அளவில் நுரை ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் சலவை சோப்புகளில் காணப்படும் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயணங்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் ஆகியவற்றின் காரணமாக யமுனை நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியின் நீர் தேவையில் 60 சதவீதத்தை யமுனை நதி பூர்த்தி செய்யும் அதே வேளையில், நகரின் மொத்த கழிவுகளில் அதே 60 சதவீதம் ஆற்றில் கலக்கிறது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்