நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நாளை இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-19 13:25 GMT

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 7-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே ராணுவ மருத்துவ நிறுவனங்களில் நடத்தப்படும் பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கும், நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20(நாளை) வரை நீட்டிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை முடிவடைய உள்ள நிலையில், இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாளை இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்