அரசு திட்டங்களை செயல்படுத்துவதே காங்கிரசின் நோக்கம் மந்திரி சந்தோஷ் லாட் பேட்டி

அரசு திட்டங்களை செயல்படுத்துவதே காங்கிரசின் நோக்கம் என்று மந்திரி சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-06 18:45 GMT

உப்பள்ளி-

அரசு திட்டங்களை செயல்படுத்துவதே காங்கிரசின் நோக்கம் என்று மந்திரி சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்கள்செயல்படுத்தப்படும்

தார்வாரில் உள்ள முருக மடத்துக்கு சென்ற தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி அதிகார போதையில் மயங்கிவிட்டதாக கூறுகின்றனர். நாங்கள் எந்த அதிகார போதைக்கும் மயங்கவில்லை. மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். தற்போது காங்கிரசின் நோக்கம் முழுவதும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில்தான் உள்ளது. அதை மக்களிடம் எடுத்து செல்வதே எங்களது குறிக்கோள்.

எங்கள் ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடகத்தில் அவசர நிலை வரும் என்று கூறியுள்ளார். அவர் எந்த கண்ணோட்டத்தில் அதை கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை.

தொழிலாளர் அடையாள அட்டை

இந்த குற்றச்சாட்டிற்கு வரும் நாட்களில் அவருக்கு பதில் கிடைக்கும். வளர்ச்சி பணிகளை விட்டுவிட்டு, அவர் ஒன்று பேச, நாங்கள் ஒன்று பேசுவதை விரும்பவில்லை. வறுமை மற்றும் வளர்ச்சி குறித்து அவர் பேசவேண்டும் என்று விரும்புகிறேன். மாநிலத்தில் போலி தொழிலாளர் அடையாள அட்டை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு சில கெடுபிடிகளை விதித்துள்ளோம். அதை சரியாக கடைபிடித்தால் இந்த போலி அடையாள அட்டை ஒழிந்துவிடும். ஒடிசா ெரயில் விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை. 150 முதல் 160 பேர் வரை விபத்தில் சிக்கியிருந்தனர். அவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்