திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மாத சிறை தண்டனை..!

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-13 15:20 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கிடையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் 3 ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டது குறித்து தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் மீது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது பணி உயர்வு வழங்க நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்தும், ரூ.2,000 அபதாரம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்