18 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி உயிரியல் பூங்காவில் புலிக்குட்டிகள் பிறந்தன..!

டெல்லி உயிரியல் பூங்காவில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வங்காளப் புலி ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

Update: 2023-05-15 19:25 GMT

புதுடெல்லி,

டெல்லி உயிரியல் பூங்காவில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வங்காளப் புலி ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

டெல்லி உயிரியல் பூங்காவில் கரண், சித்தி, அதிதி மற்றும் பர்கா ஆகிய நான்கு வங்காளப் புலிகள் உள்ளன. இதில் சித்தியும் அதிதியும் நாக்பூரில் உள்ள கோரேவாடாவில் இருந்து கொண்டு வரப்பட்ட காட்டு வம்சாவளியைச் சேர்ந்த புலிகள் ஆகும்.

இந்த நிலையில் சித்தி புலி கடந்த மே 4-ந்தேதி ஐந்து குட்டிகளை ஈன்றது. அவற்றில் 3 குட்டிகள் இறந்து விட்டன. இரண்டு குட்டிகள் உயிர்பிழைத்தன. தாய்ப்புலி மற்றும் இரண்டு குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.

மேலும் தாய்ப்புலியும் குட்டிப்புலிகளும் தொடர்ந்து சிசிடிவி மற்றும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்