வனப்பகுதிக்குள் அழைத்து செல்வதில் வாக்குவாதம்: சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பூங்கா ஊழியர்கள்

பூங்காவை சுற்றிப்பார்க்க டிக்கெட் புக் செய்தபோதும் ஊழியர்கள் தங்களை பூங்காவுக்குள் அழைத்து செல்லவில்லை என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-24 11:03 GMT

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டத்தில் நந்தன்கண்ணன் உரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருவது வழக்கம். இவர்கள் பூங்காவில் உள்ள வனவிலங்குகள், பறவைகளை கண்டு களித்து வருகின்றனர்.

இதற்கிடையில், வனப்பகுதிகள் நிறைந்த பூங்காவுக்குள் பயணிக்க கட்டணத்துடன் சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை பூங்கா ஊழியர்கள் வாகனங்களில் அழைத்து சென்று வனவிலங்குகளை அருகே காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பூங்காவில் வனவிலங்குகளை காண சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 24 சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துள்ளனர். அந்த சுற்றுலா பயணிகள் நேற்று பூங்காவிற்கு வந்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துள்ளதாகவும் வனவிலங்குகளை காண அழைத்து செல்லும்படி பூங்கா ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு, பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்கான நேரம் முடிந்து விட்டதால் பூங்காவுக்குள் உங்களை அழைத்து செய்யமுடியாது என பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகளுக்கும் பூங்கா ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பூங்கா ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுற்றுலா பயணிகள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்