மராட்டியத்தில் உள்ள தொழிற்சாலையில் ஹைட்ரஜன் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - 3 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஹைட்ரஜன் கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தர்பாடா பகுதியில் அமைந்துள்ள மின் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'மூன்று தொழிலாளர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்தனர். மேலும் எட்டு பேர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்' என்று அவர் கூறினார்.